நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: எடப்பாடி பழனிசாமி பேச்சு
2022-11-07@ 01:17:43

சேந்தமங்கலம்: நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டைமேட்டில், அதிமுகவின் 51ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:
அதிமுக உடையவில்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது. நான் முதல்வராக இருந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் உத்தரவிட்டபோது, ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் வலிமையாக இருக்கிறோம். கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அதிமுக அரசுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களை இணைத்துக் கொண்டு, துணை முதல்வர் பதவி, ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கினோம். தற்போது அதிமுகவிற்கு துரோகம் செய்த சந்தர்ப்பவாதிகள், வேறு ஒரு கட்சிக்கு பி டீம் ஆக செயல்படுகிறார்கள். பி டீம், சி டீம் என எத்தனை டீம் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதிமுகவில் நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் இருக்கின்றனர். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை, தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இருமொழிக் கொள்கையில், அதிமுக உறுதியாக உள்ளது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதற்கு அதிமுக அஞ்சாது. அதிமுக பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான முடிவு. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையத்தில் ‘லீக்’
தேவிப்பட்டினம் அருகே ரூ.8 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால நாணயம் கீழக்கரையில் கண்டெடுப்பு
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!