மலைப்பகுதியில் எஸ்பி அதிரடி நிலத்தில் கஞ்சா பயிரிட்ட பெண் உட்பட 2 பேர் கைது: நாட்டுத்துப்பாக்கியை வீசிவிட்டு ஓடியவருக்கு வலை
2022-11-06@ 00:42:25

ஒடுகத்தூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம், பேரணாம்பட்டு போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மலை பகுதிகளிலும், வீட்டு அருகே உள்ள தோட்டத்திலும் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தேந்தூர் மலை கிராமத்தில் காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக எஸ்பி ராஜேஷ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, எஸ்பி தலைமையில் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று தேந்தூர் மலை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, போலீசாரை பார்த்தும் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை கீழே வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். மேலும் அங்கிருந்த பெண் உட்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கமலா(45), முத்துக்குமார்(21) என்பதும், நாட்டுத்துப்பாக்கியை வீசிவிட்ட ஓடியவர் கமலாவின் கணவர் ரவி(50) என்பது தெரியவந்தது. இவர்கள் காட்டு பகுதியில் உள்ள தங்களின் விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் கமலா, முத்துகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் பயிரிட்டு சுமார் 2 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்த கஞ்சா செடிகள் மற்றும் உலர்த்தி வைக்கப்பட்டிருந்த கஞ்சா இலைகளையும் கூடையோடு பறிமுதல் செய்தனர்.
Tags:
Hillside SP Ganja Cultivator 2 people Arrested மலைப்பகுதி எஸ்பி கஞ்சா பயிரிட்ட பெண் 2 பேர் கைதுமேலும் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண்ணுக்கு 5 ஆண்டு கடுங்காவல்
புளியந்தோப்பில் போதைப்பொருள் கடத்தல் 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சினிமா பைனான்சியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் கைது
கொள்ளை போனதாக பொய் புகார் 3 கிலோ தங்க நகையுடன் ஊழியர்கள் பிடிபட்டனர்
ஐஸ்வர்யா வீட்டை தொடர்ந்து ரஜினி வீட்டிலும் கைவரிசை புகார் அளித்ததோ 60 சவரன்; பறிமுதலோ ரூ. 3 கோடி நகைகள்: வேலைக்கார பெண், கார் டிரைவரிடம் விடிய விடிய விசாரணை
போலி பெண் டாக்டர் கைது
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!