வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி: மேயர் பிரியா பேட்டி
2022-11-05@ 16:38:31

அம்பத்தூர்: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது என மேயர் பிரியா கூறினார். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் அருகில் மழைநீர், கழிவுநீர் செல்லும் வகையில் ஜீரோ பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், டிடிபி. காலனி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், ஜீரோ பாயிண்ட் வழியாக சென்று கொரட்டூர் ஏரியில் கலக்கிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நேற்றிரவு ஜீரோ பாயிண்ட் பகுதியை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுடன் மேயர் பிரியா ஆய்வு செய்தார். ஏரியில் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் மற்றும் 7வது மண்டல குழுத்தலைவர் பி.கே.மூர்த்தி, கவுன்சிலர்கள் உஷா நாகராஜ் மற்றும் ஜான், பேரிடர் கண்காணிப்பு குழுவினர் உடனிருந்தனர்.
பின்னர், நிருபர்களிடம் மேயர் பிரியா கூறுகையில்:
சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அவற்றை போர்க்கால அடிப்படையில் உடனுக்குடன் அகற்றும் பணி நடந்து வருகிறது. மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டு அனைத்து கழிவுகளையும் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுளள்து. ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் மழைகாலம் முடிந்தவுடன் அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்படும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. முக்கியமான இடங்களில் மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. மழைநீரை அப்புறப்படுத்த மின்மோட்டார், ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 10 முதல் 100 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் தேவையான அளவிற்கு உள்ளது” என்றார்.
மேலும் செய்திகள்
குளித்தலை தொகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவுச் சின்னம்: அமைச்சர் சாமிநாதன் தகவல்
தனிப்பட்ட அதிகாரம் என்ற தலைப்பில் 50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளனர்: ஆளுநர் மாளிகை மீது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு..!!
தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!