மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தேர்தல் சூட்டை கிளப்பிய ஆடியோ பதிவுகள்
2022-11-05@ 14:54:13

நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இந்த சம்மேளனத்தில் 95 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் உள்ளன. புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் 10ம் தேதி நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில் நடைபெறுகிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், இணைச்செயலாளர் ஆகிய 4 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. 5 மண்டல துணைத்தலைவர்கள், 4 மண்டல இணைச் செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சம்மேளனத்தின் 40 ஆண்டு கால வரலாற்றில் இது ஒரு புதுமையான தேர்தலாக பார்க்கப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் முடியும் வரை அனைவரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனுதாக்கலுக்கு பின் 2 பேர் தலைமையில் அணிகள் உருவாகியுள்ளது.
நாமக்கல் லாரி சங்கத்துக்கு எதிராக, நாமக்கல் ட்ரெய்லர் சங்கமே வேட்பாளரை நிறுத்தியுள்ளது. லாரி சங்கத்தின் பொருளாளர் சீரங்கன், சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவார் என திடீரென வேட்புமனு தாக்கலுக்கு ஒருநாள் முன்னதாக லாரி சங்கத்தில் தீர்மானம் போடப்பட்டது. இதையடுத்து ட்ரெய்லர் சங்கமும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி பொருளாளர் பதவிக்கு அந்த சங்கத்தின் செயலாளர் தாமோதரனை வேட்பாளராக அறிவித்தது.
பரமத்திவேலூரில் 10 ஆண்டுக்கு மேலாக லாரி உரிமையாளராக இருந்தவர் ராமசாமி. கடந்த சில மாதங்களுக்கு முன் பரமத்திவேலூர் தாலுகா லாரி சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமியின் ஆதரவாளர் தோல்வி அடைந்து செந்தில்குமார் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சம்மேளன தேர்தலில் செயலாளர் பதவிக்கு தங்கள் சங்கத்தின் ஆதரவுடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் தலைவர் ராஜி செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். உள்ளூர் சங்கத்தில் இவருக்கு ஆதரவு கிடைக்காததால், திருச்சி ராக்போர்ட் லாரி சங்கத்தின் ஆதரவுடன் ராமசாமி போட்டியிடுகிறார். இப்படி ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவது பெரும் பரபரப்பை லாரி உரிமையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் தென்மண்டல சேர்மன் சண்முகப்பா, தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் இடையே ஒற்றுமை இல்லை. ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து மாநில சம்மேளன தேர்தல் நடத்துகிறார்கள் என குற்றம்சாட்டினார். இந்நிலையில், மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமி, சண்முகப்பாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, வாட்ஸ் அப்பில் பதிவிட்டார். இவர்கள் இருவரின் ஆடியோ பதிவுகளும் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாளை நாமக்கல்லில் (சிம்டா) தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சண்முகப்பா கலந்து கொள்கிறார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!