குன்னூர் இந்திரா நகரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்தது
2022-11-05@ 12:17:50

குன்னூர்: குன்னூர் இந்திரா நகரில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து சேதமானது. குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சந்திரா என்பவரது வீடு கனமழைக்கு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற வருவாய் துறையினர் மழை பாதிப்பால் ஏற்படும் சேதம் குறித்து பார்வையிட்டனர். தொடர்ந்து குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!