கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டு பயணம் பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை: ஜனாதிபதி, பிரதமருக்கு ஆளுநர் கடிதம்
2022-11-05@ 00:27:39

திருவனந்தபுரம்: ‘கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டுக்கு சென்றபோது தன்னிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை,’ என்று ஜனாதிபதி, பிரதமருக்கு கேரள ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பினராயும், ஆளுநரும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைப்பது உட்பட, கேரள அரசு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களில் இதுவரை ஆளுநர் கையெழுத்திடவில்லை.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பினராய், ‘ஆளுநர் சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்,’ என குற்றம்சாட்டினார். இந்நிலையில், ஜனாதிபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும் ஆளுநர் ஆரிப் திடீரென கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கடந்த மாதம் முதல்வர் பினராய், கனடா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் சென்றார். அது பற்றி என்னிடம் முறைப்படி தெரிவிக்கவில்லை. அவர் வெளிநாடு சென்றபோது, யாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்பதும் கூறப்படவில்லை. இது தொடர்பாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார். கேரள அரசியலில் இது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Kerala Chief Minister Pinarayi Vijayan Foreign Travel President Prime Minister Governor's letter கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளிநாட்டு பயணம் ஜனாதிபதி பிரதமருக்கு ஆளுநர் கடிதம்மேலும் செய்திகள்
மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்
பூட்டான் மன்னர் நாளை வருகை
பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்
2022-23ம் நிதியாண்டில் திருப்பதி கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,520.29 கோடி
சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்
குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!