SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்; முந்தினார் ஸ்வியாடெக்: டாரியாவுக்கு முதல் வெற்றி

2022-11-05@ 00:08:55

ஃபோர்ட் வொர்த்: அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் நகரில்  உலக தரவரிசையில் முன்னணி வரிசையில் உள்ள 8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் டிரேசி ஆஸ்டின்  பிரிவில் உள்ள வீராங்கனைகளுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதலில் இகா ஸ்வியாடெக்(போலாந்து, முதல் ரேங்க்), கரோலின் கார்சியா(பிரான்ஸ், 6வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர். தங்கள்  முதல் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ள  இருவரும், இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதி உறுதி என்பதால் ஆட்டத்தில் வேகம் காட்டினர்.

ஆனால் கூடுதல் வேகம் காட்டிய  ஸ்வியாடெக் ஒரு மணி 23 நிமிடங்களில்  6-3, 6-2 என நேர் செட்களில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளார். அடுத்த ஆட்டத்தில் கோரி காஃப்(அமெரிக்கா, 4வது ரேங்க்), டாரியா கசட்கினா(ரஷ்யா, 8வது ரேங்க்) இருவரும் முதல் வெற்றிக்காக போராடினர். முதல் செட் டைபிரேக்கர் வரை நீண்டது. அதை 7-6(8-6) என்ற புள்ளிக் கணக்கில் டாரியா போராடி கைப்பற்றினார். அதன் பிறகு 2வது செட்டையும் டாரியவே 6-3 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.

அதனால் ஒரு மணி 40நிமிடங்களில் 2-0 என்ற நேர் செட்களில் டாரியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். கடைசி ஆட்டத்தில் டாரியா, கார்சியா உடன் மோத இருக்கிறார். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி வாய்ப்பை பெறுவார்கள். தொடர்ந்து 2 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள இளம் வீராங்கனை கோரி தனது கடைசி ஆட்டத்தில் ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார். 

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்