வாடிக்கையாளர்களை கவர மும்பையில் இருந்து இளம்பெண்களை இறக்கிய ஆசாமி: மோசடி மன்னன் குறித்து பரபரப்பு தகவல்
2022-11-04@ 14:24:42

நாகர்கோவில்: கன்னியாகுமரி லாட்ஜில், போலீசார் நடத்திய சோதனையில் பண இரட்டிப்பு மோசடி கும்பல் சிக்கியது. இவர்களிடம் நடந்த விசாரணையில், மதுரை அருகே பேரையூரை சேர்ந்த சுந்தரபாண்டி (36) என்பவர் தான் கும்பல் தலைவனாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரபாண்டி உள்ளிட்ட 17 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் இரு இளம்பெண்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரூ.11 லட்சம் பணம், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைதாகி உள்ள சுந்தரபாண்டி, 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். விவசாயம் செய்து வந்த இவரை இரிடியம் தருவதாக கூறி அவரை சிலர் ஏமாற்றினர். இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சுந்தரபாண்டி, மலேசியா சென்றுள்ளார். அங்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள முதலாளி சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். பட்டினி கிடந்து மிகவும் கஷ்டப்பட்டு ஊருக்கு வந்தார். பின்னர் பால் கூட்டுறவு சொசைட்டியில் கடன் வாங்கி மாடு வளர்ப்பில் ஈடுபட்டார். மீண்டும் இவரை இரிடியம் கும்பல் ஏமாற்றியது. எனவே ஏமாற்றினால் தான் பிழைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த சுந்தரபாண்டி, தனது நண்பர் ஒருவரின் மூலம் தன்னிடம் இரிடியம் இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்பினார்.
இதை பார்த்து பலரும் அவரை தொடர்பு ெகாண்டனர். பின்னர் தன்னிடம் ரூ.500 கோடி வரை இருப்பதாக கூறி அவர்களை ஏமாற்ற தொடங்கினார். இவ்வாறாக படிப்படியாக பலரை ஏமாற்றி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தின் மூலம் ஏராளமான நிலங்கள் வாங்கி உள்ளார். அழகான பெண்கள் இருந்தால் தான் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதற்காக தினமும் ரூ.2500 சம்பளத்தில் மும்பையில் இருந்து இளம்பெண்களை வரவழைத்துள்ளார். அவர்களுக்கான விமான டிக்கெட் இலவசமாக எடுத்து கொடுத்துள்ளார். தனது பாதுகாப்புக்காக பவுன்சர்களை நியமித்துள்ளார். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000 வரை சம்பளம் கொடுத்துள்ளார். எம்.பி.ஏ., இன்ஜினியரிங் முடித்தவர்களும் பவுன்சர்களாக வந்துள்ளனர்.
தற்போது இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக ரிசர்வ் வங்கி உதவியுடன் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம் என கூறி, அதற்கான போலி சான்றிதழ்களையும் காட்டி உள்ளனர். யூடிப் மூலம், இந்த சான்றிதழை அச்சடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு போலீசார் கூறினர்.
7 பேருக்கு சொகுசு கார்கள்
தன்னிடம் பணம் கட்டி வருபவர்கள், ஏதாவது பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்தால் அவர்களை தனியாக அழைத்து இளம்பெண்கள் மூலம் பேச வைத்து அவர்களுக்கு கார்களை பரிசாக, சுந்தரபாண்டி வழங்கி உள்ளார். அந்த வகையில் இதுவரை 7 பேர் இவரிடம் ெசாகுசு கார்களை பெற்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகள்
தேவிப்பட்டினம் அருகே ரூ.8 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால நாணயம் கீழக்கரையில் கண்டெடுப்பு
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!