SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்ல பிராணிகளை ரயிலில் கொண்டு செல்லலாம்: தெற்கு ரயில்வே தகவல்

2022-11-04@ 00:04:53

சென்னை: செல்ல பிராணிகளை பொதுமக்கள் தங்களுடன் ரயிலில் கொண்டு செல்லலாம் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பயணிகள் தங்கள் செல்லபிராணியான நாய்களை முதல் ‘ஏசி’ வகுப்பில் கொண்டு செல்ல, ரயில் மேலாளரின் மேற்பார்வையின் கீழ், லக்கேஜ் மற்றும் பிரேக் வேனில் எடுத்துச் செல்ல பதிவு செய்ய வேண்டும். பயணியர் தங்கள் பயணிக்கும் பெட்டியில் நாயை கொண்டு செல்ல, ‘ஏசி’ முதல் வகுப்பு, கூபே தங்குமிடத்தை பிரத்யேகமாக முன்பதிவு செய்ய வேண்டும்.

பயணியரின் ஒரு டிக்கெட்டில் ஒரு நாய் மட்டுமே அனுமதிக்கப்படும்.  ரயில் புறப்பட மூன்று மணி நேரங்களுக்கு முன், நாயை லக்கேஜ் அல்லது பார்சல் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் நாய்களை எடுத்து சென்றால், 6 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தப்பட்ச ₹30. நாய் உடல் நிலை குறித்து 48 நேரத்துக்கு முன்னதாக கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.

முன்பதிவு செய்யும்போது நாய்க்கு தடுப்பூசி போட்ட அட்டைகளை கட்டாயம் சமர்பிக்க வேண்டும். நாய்களை கூடைகளில் எடுத்து செல்லலாம். அதற்கான, அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். நாய்களுக்கான உணவு,குடிநீர் போன்றவைகளை உரிமையாளரே வழங்க வேண்டும். மேலும், யானை, குதிரை,  கழுதை, செம்மறி ஆடு, நாய் உள்ளிட்ட பிற விலங்குகள் மற்றும் பறவைகள்  போன்றவை ரயில்களில் ஏற்றிச் செல்லலாம். இது தொடர்பான விபரங்களை, ரயில்  நிலையங்களில் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

  • eqqperr1

    ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்