SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.8.37 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

2022-11-03@ 16:50:59

சென்னை: ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 99 நடுநிலை, 108 உயர்நிலை மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 305 பள்ளிகளுக்கு தேவையான  மேசையுடன் கூடிய இருக்கை மற்றும்  இரும்பு அலமாரிகள் வழங்க ரூ.8,37,91,008 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடன் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் தேவையின் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் மாணாக்கர் வசதியாக கல்விப் பயிலும் வகையில் 99 நடுநிலைப் பள்ளிகள் 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8,060 நீள் இருக்கைகள் மற்றும் 305 பள்ளிகளுக்கு தேவையான இரும்பு அலமாரி ஆகிய அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ரூ.7.46 கோடி செலவில் வழங்கப்படும்.

மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதன் மூலம் கல்வி கற்பதற்கான சிறந்த ஒரு சூழலை உருவாக்க முடியும் என்பதன் அடிப்படையில் 99 நடுநிலை, 108 உயர்நிலை மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 305 பள்ளிகளுக்கு தேவையான  மேசையுடன் கூடிய இருக்கை மற்றும்  இரும்பு அலமாரிகள் டான்சி மூலம் வாங்கி வழங்கிடவும், இதன் பொருட்டு செலவினமாக  ரூ.8,37,91,008/-   (ரூபாய் எட்டு கோடியே முப்பத்தேழு இலட்சத்து தொண்ணூற்று ஒன்றாயிரத்து எட்டு மட்டும்) நிதி ஒப்பளிப்பு  வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்