மூணாறு அருகே வட்டவடை வனப்பகுதியில் வனத்துறை அனுமதியுடன் சாலை அமைத்த பழங்குடியினர்
2022-11-02@ 19:23:38

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வட்டவடை கிராமம். கேரளா-தமிழக எல்லை பகுதியான வட்டவடையில் வசிப்பவர்களின் பெரும்பாலும் தமிழர்கள். மலைகளால் சூழப்பட்ட வனப்பகுதிக்கு இடையில் இவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு மறையூர் காந்தளூர் பகுதிக்கு வரவேண்டும். மேலும் வட்டவடையிலிருந்து காந்தளூர் செல்ல வனப்பகுதி வழியாக 13 கி.மீ நடந்து சென்று வந்தனர்.
வாகனத்தில் செல்ல வேண்டுமானால் மூணாறு வழியாக 100 கி.மீ சுற்றி செல்ல வேண்டும். பல வருடங்களாக வட்டவடையிலிருந்து வனப்பகுதி வழியாக காந்தளூர் செல்லும் நடைபாதை வழியை வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் வனப்பகுதி என்பதால் வனத்துறை இதற்கு தடையாக நின்றது. இந்நிலையில், தற்போது வனப்பகுதி வழியாக மண் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.
இதனால் வட்டவடை ஊராட்சியை சேர்ந்த பழங்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வட்டவடை ஊராட்சியில் இருந்து காந்தளூருக்கு மண் சாலையை பழங்குடி மக்கள் அமைத்துள்ளனர். தற்போது அமைக்கப்பட்ட மண் சாலையால் இப்பகுதி பழங்குடியின மக்கள் ஜீப்பில் அரைமணி நேரத்தில் மறையூர்-காந்தளூர் சாலையை அடைந்துவிடலாம். இதுகுறித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைக்க, மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வட்டவடை-காந்தளூர் சாலை விரைவில் போக்குவரத்திற்கு நல்ல சாலையாக மாற்றபடும் என்றார்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!