எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் துவக்கப்படும் : மதுரை தோப்பூரில் ஆய்வுக்கு பின் அதிகாரிகள் பேட்டி
2022-11-02@ 09:17:05

திருப்பரங்குன்றம் :எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் துவக்கப்படுமென, மதுரை தோப்பூரில் ஆய்வுக்கு பின் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர். மதுரை அருகே தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,970 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
பிரதமர் மோடியால் கடந்த 2019, ஜன.27ல் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டமானது, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்தது. தமிழக அரசு மற்றும் தமிழக எம்பிக்கள் தந்த அழுத்தத்தை தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ்க்கான மருத்துவ படிப்பிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகிறது.
ஆனால் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை தவிர, மருத்துவமனை கட்டிட பணிகள் தற்போது வரை துவங்கவில்லை. சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து டாக்டர் நாகராஜன், எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் எம்.ஹனுமந்த ராவ் மற்றும் ஜப்பான நிதி நிறுவன அதிகாரிகள் ரியோ ஒகுசி, ஆதித்தி பூரி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.
இயக்குநர் டாக்டர் எம்.ஹனுமந்தராவ் கூறும்போது, ‘‘எய்ம்ஸ் தலைவர், ஜப்பான் நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் கட்டுமான பொறியாளர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டோம். மேலும் கட்டுமான பணிகளை துவக்கவும் அதற்கு எடுக்க வேண்டிய முதற்கட்ட அறிக்கைகள் தயார் செய்வது குறித்தும் விவாதித்தோம். விரைவில் கட்டுமான பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓராண்டுக்குள் பணிகளை துவங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளோம்’’ என்றார்.
20க்கும் மேற்பட்ட குழுக்கள் ஆய்வு
மதுரை ேதாப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிட்ட அதே ஆண்டில் அறிவிப்பு வெளியிட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் ஒன்றிய அரசு நிதியோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஜப்பான் நிறுவன நிதியை எதிர்பார்த்து கடந்த 3 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு காத்துக்கிடக்கிறது.
எந்த பணிகளும் நடக்காத இந்த இடத்தை இதுவரை 20க்கும் மேற்பட்ட குழுக்கள் கடந்த 2 வருடங்களாக ஆய்வு மட்டுமே மேற்கொண்டு சென்றிருக்கிறது. ஆனால் எப்போது பணிகள் துவங்கும் என்பது குறித்து இதுவரை பார்வையிட்டு ஆய்வு செய்த எந்த குழுவும் சரியான தகவல் தரவில்லை. விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகள்
ஐஐடி உள்ளிட்ட ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டில் 61 பேர் தற்கொலை: மதுரை எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அதிர்ச்சி பதில்
பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலம்யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கம் படித்து காண்பித்த அர்ச்சகர்கள்
பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி
ரயிலில் பாய்ந்து ஆசிரியை தற்கொலை
ஈரோடு மாநகராட்சி கமிஷனர் வீட்டில் ரெய்டு பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடு ஆவணங்கள் சிக்கியது
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!