SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை ஏர்போர்ட்டில் அதிநவீன பாலங்கள்: டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வருகிறது

2022-11-02@ 00:24:54

சென்னை: சென்னை விமானநிலையத்தில் ‘பேசஞ்சர் போர்டிங் பிரிட்ஜ்’ என்ற அதிநவீன பாலங்கள் 15 கட்டப்பட்டு வருகின்றன. அதில் 7 பாலங்கள் வரும் டிசம்பரில் பயணிகள் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டும் சர்வதேச நவீன முனையத்தில், விமானங்களில் பயணிகள் ஏறி, இறங்குவதற்கா ‘பேசன்ஞ்சர் போர்டிங் பிரிட்ஜ்’ என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து, நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகின்றன. இந்த பாலங்கள் 15ல், 7 பாலங்கள் 47 மீட்டர் நீளமுடையவை. மேலும் 7 பாலங்கள் 32 மீட்டரிலிருந்து 40 மீட்டர் உடையவை.

மற்றொரு பாலம் 32 மீட்டர் நீளம் உடையது. முதல் கட்டத்தில் 47 மீட்டர் நீளமுடைய 7 பாலங்கள்,  பயன்பாட்டுக்கு வருகின்றன. இந்த நவீன இணைப்பு பாலத்தில், 2 நகரும் பாலங்கள் அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டர் பாலங்கள் 7ம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பரில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும். மற்ற 8 பாலங்கள் அடுத்த இரண்டாவது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இந்த பாலங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டமிட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்ற நவீனபாலங்கள் இந்தியாவில், முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்தபின்பு, சென்னை விமான நிலையத்தில், விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்