காவிரி ஆற்றில் கட்டப்பட உள்ள தடுப்பணை குறித்து பதிலளிக்க பொதுப்பணிதுறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
2022-11-01@ 16:48:07

மதுரை: காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விபரங்கள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றமதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் காவிரி ஆறு தலைகாவிரியில் உருவாக்கி பூம்புகார் கடலில் கலக்கிறது எனவும், இது கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் விவசாயத்துக்கு பெரிதும் பயன்படுகிறது.
தமிழகத்தின் நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக காவிரி படுகைகள் அமைந்துள்ளது. இதில் நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் சுமார் 2.69 லட்சம் ஹெக்ட்டர் நிலங்கள் பயனடைவதாகவும், மீதம் உள்ள 6 மாவட்டங்களும் 2.20 லட்சம் ஹெக்ட்டர் என்ற அளவில் மட்டும் பயனடைவதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நல்ல பருவ மலை காலங்களில் காவிரி ஆற்றின் நடுவில் தடுப்பணைகள் இல்லாததால் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீரானது வீணாக கடலில் கலந்து வருகிறது எனவும் தெரிவித்திருந்தார். இதற்காக 2018-ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு காவிரியின் குறுக்கே கரூர் மாவட்டத்தில் சுமார் ரூ.490 கோடி செலவில் தடுப்பணை கட்ட திட்டமிட்டம் வகுத்ததாகவும், தற்போது வரை அதனை நடைமுறை படுத்தவில்லை எனவும் தனது மனுவை தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் ஒரு குறுகிய பணி இல்லை எனவும், ஆனால் இது ஒரு முக்கிய பிரச்னை எனவும் கூறினார். தொடர்ந்து அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காவிரி ஆற்றில் கட்டப்படவுள்ள தடுப்பணை திட்டத்தின் முழு விவரங்கள் குறித்து பதில் அளிக்க பொதுபணிதுறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை: ஆளுநர் பேச்சு
வேலூர் அருகே மாடு விடும் விழா களத்தில் தடுமாறி ஓடிய காளை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
கடன் தருவதாக பெண்களிடம் ஆதார், பான் கார்டு விவரம் சேகரிப்பு: பைனான்ஸ் ஊழியர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோவில் கைது
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!