கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை கடலில் குளித்த கல்லூரி மாணவன் பலி; மற்றொரு மாணவன் மாயம்
2022-11-01@ 01:00:13

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை அக்கரை கடலில் குளித்த கல்லூரி மாணவன் அலையில் சிக்கி பலியானார். மற்றொரு மாணவனை காணவில்லை.
தேவகோட்டை, ராம் நகர், சிவகங்கை ராஜா சாலையைச் சேர்ந்தவர் திலக்சன் (19). இவரது நண்பர் நாகப்பட்டினம் பொறையூர், மருத்துவமனை தெருவை சேர்ந்த வர் சஞ்சித் (19). இருவரும் சென்னை ராஜிவ் காந்தி சாலை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சி.எஸ்.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று முன்தினம் நண்பர்களான சுரேஷ், விஷால், கில்பட், சடகோபன் ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அனைவரும் கடலில் குளித்துள்ளனர். இதில் திலக்சன் மற்றும் சஞ்சித் இருவரும் ராட்ச அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த நண்பர்கள் கூச்சல் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்த மீனவர்கள் இருவரையும் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் சடகோபன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கானத்தூர் கடற்கரையில் திலக்சன் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி மகன் கண் முன் தாய் பரிதாப பலி
கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து மை பூசி அழிப்பு: மர்ம நபருக்கு வலை
கோயம்பேட்டில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் ரகளை
துப்பு துலங்காத கொலைகளை கண்டறிய சிறப்பு துப்பறியும் காவல் படை: சென்னை கமிஷனர் அதிரடி
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு
மூத்த குடிமக்கள் வசதிக்காக வேளச்சேரி பேபி நகரில் ரேஷன் கடை: அசன் மவுலானா எம்எல்ஏ வலியுறுத்தல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!