பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணி சாம்பியன்
2022-10-31@ 15:31:10

நவி மும்பை: இந்தியாவில் முதன்முறையாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டிக்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்றன. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று இந்த இரு அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனாமரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் (ஷேம்சைடு கோல்) அடித்தார். இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும் செய்திகள்
அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!
காலிறுதியில் ரைபாகினா: காயத்தால் விலகினார் பியான்கா
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
சில்லி பாயின்ட்...
புஜாராவை அவுட்டாக்குவது எளிதல்ல: ஹேசல்வுட் புகழாரம்
அருங்காட்சியகத்தில் மெஸ்ஸி சிலை
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!