20 தற்காப்பு கலைகளில் இந்திய திபெத் படைக்கு ஆயுதமற்ற போர் பயிற்சி; சீனாகாரன் சிக்கினால் இனி அதோகதி
2022-10-31@ 01:28:35

பஞ்ச்குலா: சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு புதிதாக ஆயுதமின்றி தாக்கும் போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சீனாவுடன் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள 3,488 கிமீ தூர எல்லையை 98 ஆயிரம் வீரர்களை கொண்ட இந்திய - திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாத்து வருகின்றனர். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இப்படையை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி அடித்த கம்புகள், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கினர்.
இந்நிலையில், சீனாவின் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு ஆயுதமின்றி சண்டை போடுவதற்கான தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகிறது. ஜூடோ, காரத்தே, இஸ்ரேல் ராணுவத்தினர் பயன்படுத்திய கிராவ் மாகா உள்பட 20 தற்காப்பு கலைகளைக் கொண்டு ஆயுதமின்றி புதிய, நவீன போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தோ - திபெத் படையில் புதிதாக சேரும் வீரர்களுக்கு 3 மாத பயிற்சியில் அனைத்து தற்காப்பு கலைகளிலும் உள்ள குத்துதல், உதைத்தல், தூக்கி வீசுதல், அசைய விடாமல் போடும் கிடுக்கிப்பிடி, எதிரியை வீழ்த்துதல் உள்ளிட்ட ஆயுதமற்ற போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
நீதிமன்றம் தண்டனையை அறிவித்த பின்னர் ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றிய அமைச்சர் கேள்வி
வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!
மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட விருபாக்சப்பாவுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு தரக் கூடாது: பெங்களூரு பாஜக அலுவலகம் முன்பு போராட்டம்
புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும்: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!