பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் நாடு முன்னேற மாணவர்கள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்: ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்
2022-10-30@ 00:36:42

சென்னை: பணம், பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக இல்லாமல், நாட்டு முன்னேற்றத்திற்காக மாணவ-மாணவிகள் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியில், பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி-20 கனவு திட்டம் புத்தகத்தை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, துணை தலைவர் டால்பின் தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் பேசியதாவது: பிரதமர் மோடி 20 ஆண்டுகள் அரசியலில் பெரும் சாதனைகள் புரிந்து உள்ளார். குஜராத்தின் முதல்வராகவும், நாட்டில் பிரதமராக இரண்டு முறையும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். அவரது சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்குவதற்காக பாடுபட்டு வருகிறார். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும். அதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி அடையும். கல்வி கற்பதன் நோக்கம் ஆராய்ச்சி என்ற குறிக்கோளாக இருக்க வேண்டும். பணம், பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக கூடாது என்றார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!