வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
2022-10-29@ 00:48:28

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் (நவம்பர்) 11ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதையடுத்து நவம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்படும். இந்த பணிகள் டிசம்பர் 26ம் தேதிக்குள் நிறைவுபெறும். இதை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 2023 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் நவம்பர் 11ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஒரு மாதம் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில் அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக சனி, ஞாயிறு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 12-11-2022 (சனி), 13-11-2022 (ஞாயிறு) மற்றும் 26-11-2022 (சனி), 27-11-2022 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி அலுவலகங்களில் நடத்தப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறி உள்ளார்.
Tags:
Electoral roll add name 4 days in November special camp Chief Electoral Officer வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரிமேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!