வட சென்னை அனல் மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
2022-10-29@ 00:38:15

சென்னை: மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் 2வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டு 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 2வது நிலையின் 1வது அலகிலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் கொதிகலன் பழுது காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:
North Chennai Thermal Power Station 1200 MW power generation affected வட சென்னை அனல் மின் நிலைய 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்புமேலும் செய்திகள்
பாஜவை கண்டித்து தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை காவேரி மருத்துவமனையில் இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு?: சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர்கள் தகவல்
தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.1,406 கோடியில் 150 கி.மீ., சாலை பணிகள் விரிவாக்கம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தில் பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
லட்சக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: சென்னையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச்செயலர் இறையன்பு அதிகாரிகளுக்கு உத்தரவு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி