கும்பாபிஷேகத்துடன் தேவர் குருபூஜை விழா இன்று துவங்கியது
2022-10-28@ 16:51:54

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் தற்போது கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை நான்காம் கால வேள்வி பூஜை மற்றும் வேத பாராயணம், தீபாராதனை, யாத்ராதானம் நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.
கருடன் வந்து வட்டமிட்டதும் கோயில் கோபுரம் கலசம் மற்றும் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், அதிமுக எம்பி தர்மர், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ கதிரவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று வழக்கமான ஆன்மீக விழா துவங்கியது. நாளை அரசியல் விழாவும், நாளை மறுநாள் குருபூஜையும் நடக்கிறது.
‘‘எடப்பாடி வாழ்க - ஒழிக கோஷம்’’
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தங்க கவசம் பொருத்திய தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது உடன் வந்திருந்த ஆதரவாளர்கள் எடப்பாடி வாழ்க என கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி ஒழிக, உதயகுமாரே வெளியேறு என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் தொல்லை குமரி பாதிரியார் பாளை மத்திய சிறைக்கு மாற்றம்: ஆபாச படங்களை பரப்பியவர்களை பிடிக்க கேரளாவில் தனிப்படை முகாம்
படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி
புதுச்சேரியில் நீர்தேக்க தொட்டி மீது ஏறி அரசு ஊழியர்கள் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல்: பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம்; போலீசாருடன் வாக்குவாதம்
கீழடி அருங்காட்சியகம் மெக்சிகோ தூதர் வியப்பு: பழம்பொருட்கள் குறித்து கேட்டறிந்தார்
எண்ணெய் கசிவு பாதிப்பை ஆய்வு செய்யக் கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மக்கள் செல்ல விடாமல் கட்டுப்பாடுகள் கொடநாடு பாதை பிரச்னை எஸ்டேட் வக்கீல் விடுதலை: 16 ஆண்டு வழக்கில் குன்னூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி