SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்!: குளிர்ச்சியான இடங்களுக்கு மக்கள் படையெடுப்பு.. காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு..!!

2022-10-28@ 10:00:43

ஸ்பெயின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு அக்டோபர் மாதத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் பொதுவாக அக்டோபர் மாதங்களில் வழக்கத்தை விட 5ல் இருந்து 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு மாதத்தில் வெப்பத்தின் அளவு கூடுதலாக உள்ளதாக அந்த நாட்டு மக்கள் கூறுகின்றனர். வெப்பத்தை தணித்துக்கொள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் குழுமியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மற்ற அண்டை நாடுகளை விட ஸ்பெயினில் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது.

இதனால் அங்கு கோடை காலங்களில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் வீடற்றவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பல இடங்களில் வெப்பத்தின் அளவு 86 டிகிரி பாரன்ஹீட் ஆக உள்ளது. தெற்கு ஸ்பெயினில் உள்ள மோரன்பீலாவில் 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் காட்டுத் தீ ஏற்படவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் வெப்பம் அதிகரிப்பால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெயில் வாட்டி வதைப்பதால் குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்