காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை..!!
2022-10-26@ 10:49:15

கோவை: கோவை உக்கடம் ஈஸ்வரன்கோவில் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக கோவையில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், என்.ஐ.ஏ. விசாரிக்க முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமையின் டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் கோவையில் ஆய்வு மேற்கொள்கின்றனர். காரில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் குறித்து காவல்துறையினரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கேட்டறிந்து வருகின்றனர்.
ஜமேஷா முபினின் பிண்ணனி, வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். என்.ஐ.ஏ. தகவல்களை திரட்டினாலும் தற்போது வரை விசாரணை கோவை போலீசார் வசமே உள்ளதாக ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கார் வெடித்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் செல்ல வாய்ப்பிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
சோழவரம் ஏரியில் வாலிபர் சடலம் மீட்பு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!