வீட்டின் முன் கடை விரித்ததற்காக தீபாவளி கடைகளை நொறுக்கிய பெண் டாக்டர் மீது வழக்கு
2022-10-25@ 15:38:37

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் கோமதி நகர் பகுதியில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையோரம் அமர்ந்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்ரகர்புரத்தை சேர்ந்த டாக்டர் அஞ்சு என்ற பெண், திடீரென தனது வீட்டில் இருந்து கையில் தடியுடன் வெளியே வந்து, அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார். தனது வீட்டின் முன் கடை விரித்ததற்காக தாக்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கடைக்காரரின் புகாரின் பேரில் அஞ்சு மீது கோமதிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு வியாபாரிகள் சாலையோரங்களில் கடை போட்டிருந்தனர். தனது வீட்டின் முன் கடைகள் இருப்பதாக கூறி, அந்த கடையின் பொருட்களை அஞ்சு சேதப்படுத்தினார். அதனால் அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. சிறு வியாபாரிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம்’ என்றனர்.
மேலும் செய்திகள்
அப்போ 109.5, இப்போ 70.69 டாலர் பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்
ஜாமீனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் டெல்லி சிறை கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி வழங்க தயார்: மோசடி மன்னன் சுகேஷ் கடிதம்
பாகிஸ்தான், ஆப்கானில் பூகம்பத்தால் 12 பேர் பலி: 160 பேர் காயம்
6ஜி ஆராய்ச்சி, மேம்பாடு சோதனை மையம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பதற்றத்தை உருவாக்குவதோடு போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!