சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது: மாநகராட்சி ஆணையர் ககன்கதீப் சிங் பேடி பேட்டி
2022-10-25@ 15:36:06

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த ஓராண்டில் மட்டும் 964 கி.மீட்டர் அளவு நடைபெற்று வருக்கிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த அதிக மழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் நீண்டகாலம் வடியாமல் இருந்தது. அதை சரிசெய்வதற்காக தமிழக அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக கடந்த சில மாதங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தவிர நெடுஞ்சாலைத்துறை மூலமாக மழைநீர் வடிகால் வசதிகள் சென்னை நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, செம்மஞ்சேரி பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. நீர்வளத்துறை சார்பிலும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த ஓராண்டில் மட்டும் 964 கி.மீட்டர் அளவு நடைபெற்று வருகின்றது.
சென்னையில் மண்டல அளவில் 224 கி.மீட்டர் அளவு பணிகள் நடைபெற்று வருகின்றது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் இதற்காக தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு மழைநீர் தேங்கிய இடங்களான, சீதாம்மாள் காலனி, தியாகராயநகர், பசுல்லா ரோடு, ஜி.என்.செட்டி ரோடு, அசோக்நகர், மாம்பலம், விருகம்பாக்கம், அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், நீண்டகாலமாக மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கும். அதற்காகவும் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் எல்லாம் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. நேற்று தலைமைச் செயலாளர் ஆய்வு செய்த ஜிஎன் செட்டி சாலையில் அங்கு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அதேநேரத்தில் நீண்டகாலப் பணிகள்கூட சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொசஸ்தலை ஆறு மற்றும் கோவளம் ஆகிய திட்டங்களின் கீழ் இந்த நீண்டகால பணிகள், திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இது 3 ஆண்டுகால திட்டம்' என்று அவர் கூறியுள்ளார்.
Tags:
சென்னை மழைநீர் வடிகால் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது மாநகராட்சி ஆணையர் ககன்கதீப் சிங் பேடி பேட்டிமேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!