தேர்தலில் போட்டியிட இம்ரான்கானுக்கு தடை: பாக். தேர்தல் ஆணையம் அதிரடி
2022-10-22@ 00:02:49

இஸ்லாமாபாத்: பரிசு பொருட்களை விற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்த போது, வெளிநாட்டு பிரமுகர்கள், தலைவர்கள் பரிசாக வழங்கிய விலை உயர்ந்த பொருட்களை கருவூலத்துக்கு அனுப்பவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பதவி விலகிய போது அந்த பரிசுப் பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டார். இவற்றை சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு விற்றார். அது பற்றிய விவரங்களை வருமான வரி கணக்கு தாக்கலில் குறிப்பிடவில்லை. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு அரசு கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான இம்ரான் கான், ‘கருவூலத்தில் ரூ.2.1 கோடி பணம் செலுத்திய பின்னர் பொருட்களை எடுத்து சென்றேன். இதன் மூலம், ரூ.5.8 கோடி கிடைத்தது. இதில், விலை உயர்ந்த 4 ரோலக்ஸ் வாட்ச்சுகள், பேனாக்கள், தங்க மோதிரம் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள்அடங்கும்,’ என தெரிவித்தார். இதை விசாரித்த, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பரிசு பொருட்களை விற்றதில் இருந்து கிடைத்த வருவாயை மறைத்த குற்றத்திற்காக இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
Competition in elections Imran Khan Ban Pak. Election Commission தேர்தலில் போட்டி இம்ரான்கான் தடை பாக். தேர்தல் ஆணையம்மேலும் செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
ஆப்கானித்தானில் பெண்கல்விக்கு தடை விதிப்பு: ஆன்லைன் கல்வி முறையை நாடும் மாணவிகள்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
விலைவாசி உயர்வால் பிரிட்டனில் பலர் ஏழையாகிவிட்டனர்: நிதித்துறை அதிகாரி கருத்து
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகளின் படகுகள் கவிழ்ந்த விபத்து: 28 பேர் உயிரிழப்பு.! 60 பேர் மாயம்
கலிபோர்னியாவில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்