புனரமைப்பு பணியின்போது மசூதியில் தீ; ராட்சத குவிமாடம் இடிந்தது: இந்தோனேசியாவில் பயங்கரம்
2022-10-20@ 16:04:58

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் உள்ள மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு ஜகார்த்தாவில் ஜாமி மசூதி உள்ளது. இதன் ராட்சத குவிமாடம் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்றும் வழக்கம்போல புனரமைப்பு பணி நடந்தபோது, திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி அடர்ந்த புகை மூட்டமாக காணப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அலறி துடித்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.
தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் உறுதி செய்தனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மசூதியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!