மனித உரிமை ஆர்வலர்கள் மாயமான வழக்கு: கோத்தபய நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
2022-10-20@ 16:05:40

கொழும்பு: மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக வேண்டும் என இலங்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு 2 மனித உரிமை ஆர்வலர்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனித உரிமை மீறல் வழக்கில் அவருக்கு கடந்த 2018ம் ஆண்டு யாழ்ப்பாணம் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி அப்போது கோர்ட்டில் ஆஜராகாமல் அவர் தப்பினார். அதன்பின், நாட்டின் அதிபர் ஆனதால் அரசியல் சாசன விலக்கு பெற்றவர் என்ற முறையில் இந்த சம்மன் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக கோத்தபய ராஜபக்சேவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகியதால் அவருடைய அரசியல் சாசன விலக்கு ரத்தானது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்திய தூதரகம் மீது தாக்குதல்.. வன்முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என அமெரிக்கா கண்டனம்!!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பணி நீக்கம் செய்யப்பட்ட எச் 1 பி விசா ஊழியர்கள் 60 நாட்களில் வௌியேற வேண்டும் என்பதில் உண்மையில்லை: அமெரிக்க குடியுரிமை இயக்குநரகம் தகவல்
கனடாவில் 2வது முறையாக மகாத்மா காந்தி சிலை சேதம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!