SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் ராணுவ சட்டம்: புடின் அறிவிப்பு

2022-10-20@ 00:09:12

மாஸ்கோ: உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை கைப்பற்றி, அவற்றை தனது நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் நேற்று அறிவித்தார். இதன்படி, இப்பிராந்தியங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள், பொதுமக்கள் கூடுவதற்கு தடை, கடும் சோதனை உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்களை ஆக்கிரமிப்பு நிர்வாகங்களின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று புடின் தெரிவித்தார். இது தொடர்பான ஆவணங்கள் உடனடியாக கூட்டமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும். புடினின் முடிவை அங்கீகரிப்பது கூட்டமைப்பு கவுன்சிலின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ``பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் தற்போது இல்லை,’’ என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்