போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் விருது
2022-10-18@ 01:36:04

சென்னை: போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு, பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் என்ற தேசிய விருது மற்றும் இந்த ஆண்டின் சிறந்த நகை விளம்பர படத்துக்கான விருது ஆகியவற்றை ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விருது, இந்திய நகைத்துறையின் ஆஸ்கராக கருதப்படுகிறது. இதில் சிறந்த விளம்பர படத்துக்கான விருது, ஆயிரம் கண்கள் விளம்பர படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர படம், ஒரு குடும்பத்தில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள அன்பையும், அக்கறையையும், உறவின் பிணைப்பையும் கூறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தந்தை தனது மகளை ஈன்று, வளர்த்து, கல்வி தந்து, நல்ல முறையில் வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கிறார். பின்னர், தனது மகளின் திருமண நாளில், தங்களது அன்பின் பிணைப்புக்கு இணையாக போத்தீஸ் ஸ்வர்ண மஹாவின் மிகத் தூய்மையான தங்க நகைகளை அணிவித்து வளம் மிக்க மகளாக அழகு பார்த்து பேரானந்தம் அடைகிறார்.
இந்த தருணத்தைக் காணவே ஆயிரம் கண்கள் வேண்டும். என்பதே படத்தின் மூலக் கருவாகும். இதுகுறித்து போத்தீஸ் ரமேஷ் கூறுகையில், ‘‘எங்களின் நகை வடிவமைப்பு, கோயில் கட்டிட கலையில் உள்ளபடி, அன்னை ஆண்டாளின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி, அவரது வாழ்க்கையின் முத்திரையாக விளங்குகிறது. இதில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் வடிவமைப்பு உன்னதம். இந்த அணிகலனில், மின்கலன்களும் தொலை உணரி மூலம் இயக்கப்படுகிறது. இதனால் ஆரம், ஒட்டியாணம் ஆகிய நகைப் பகுதிகள் உயிரோட்டமாக இயங்கி நகரும் போது, பின்னணியாக தெய்வீக இன்னிசை இனிக்கிறது. குறிப்பாக, விஷ்ணு பெருமாள் உள்ளே ஓய்வெடுப்பதை காட்டும் வகையில், முழு கோபுரமும் கம்பிரமாக எழுந்து நிற்கிறது.
இந்த கோயிலில் நிழற்படம் எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதால், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலை சேர்ந்த பொன்வினைஞர்களின் குழு, கோயில் வளாகத்தில் தங்கி, இந்த புகழ்பெற்ற தலைசிறந்த படைப்பை உருவாக்க, கோயிலுக்குள் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் துல்லியமாக கையால் வரைந்தனர். மாபெரும் விருதுபெற்ற வசீகரிக்கும் இந்த நகையின் எடை மூன்று கிலோவிற்கும் அதிகமாக உள்ளது. இதனை வடிவமைக்க 365 நாட்கள் மற்றும் 3,285 மணி நேர திறனுழைப்பு தேவைப்பட்டது. தேசிய விருதுபெற்ற மணப்பெண் நகைகள் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை, குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூமில் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. ஊழல் விசாரணை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்
கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை போதைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை மாவட்ட திட்ட அலுவலரிடம் 3 மணி நேரம் விசாரணை: 10 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை அன்புமணி கண்டனம்
உயர்கல்வித்துறை உத்தரவு தமிழ்நாடு கல்லூரிக்கல்வி இயக்குனராக கீதா நியமனம்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!