காங். தலைவர் தேர்தல்!: டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வாக்களித்தார் மூத்த தலைவர் சோனியா காந்தி..பெல்லாரியில் வாக்களித்தார் ராகுல்காந்தி..!!
2022-10-17@ 13:01:39

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். 22 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியது.
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். மூத்த தலைவர்கள் பலரும் வாக்களித்தனர்.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாக்களித்தார். இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் வாக்களித்தார். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனகல்லு கிராமத்தில் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவு செய்தார். ராகுல் காந்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரஷும் தனது வாக்கை பதிவு செய்தார்.
மேலும் செய்திகள்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
தனது வீட்டை தாக்கிய பழங்குடி வகுப்பினர் மீது நடவடிக்கை வேண்டாம்: எடியூரப்பா பேட்டி
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்காவில் விடப்பட்ட சிவிங்கிப்புலி உயிரிழப்பு
டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்