‘வழக்கை வாபஸ் பெற வைத்தும் ஏமாற்றினார்’ அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட்டு நடிகை தகராறு
2022-10-14@ 16:45:49

ராமநாதபுரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் மனு அளித்த துணை நடிகை சாந்தினி, ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டை இன்று முற்றுகையிட்டு தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன், சினிமா துணை நடிகை சாந்தினி 5 ஆண்டு சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் 3 முறை கர்ப்பமடைந்த சாந்தினி மணிகண்டனின் நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர் ஏமாற்றியதாக போலீசில் சாந்தினி புகார் அளித்தார். இதன்படி, மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். பல முறை அவரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடைபெற்று வரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தினி புகாரை, அவர் தரப்பு திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்பிரச்னையில் இருந்து விடுபட்டு, அதிமுக நிகழ்வுகளில் மணிகண்டன் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு துணை நடிகை சாந்தினி, இன்று காலை 11 மணிக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவர் கண்ணீர்மல்க கூறியதாவது: ‘‘என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய மணிகண்டன், இழப்பீடு தருவதாக கூறி வழக்கையும் வாபஸ் வாங்க வைத்தார். இப்போது இழப்பீடுஏதும் தராமல் ஏமாற்றி வருகிறர். எனக்கு நியாயம் வழங்க வேண்டும்’’ என்று கூறி வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். ஆனால், மணிகண்டன் அங்கு இல்லை, மதுரையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாந்தினி மதுரை புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!
நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையில் 19 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டது: சுகாதார அலுவலர் சங்கம் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
விளாப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்க கட்டிடம் திறப்பு
வருவாய் மீட்பு சட்டத்தில் அசல் ஆவணங்களை விடுவித்து கிரையதாரர்களிடம் ரூ.6 லட்சம் வசூல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!