போக்குவரத்துக்கு தற்காலிக இரும்பு பாலம் மெட்ரோ ரயில் பணிகளுக்காக அடையாறு மேம்பாலம் இடிப்பு: மெட்ரோ நிர்வாகம் தகவல்
2022-10-14@ 03:03:11

சென்னை: மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அடையாறு ஆற்றின் கீழ் திருமயிலை, பக்கிங்காம் கால்வாயில் 58.33 மீட்டரும், அடையாறு ஆற்றில் 666.3 மீட்டரும், இந்திரா நகர் பக்கிங்காம் கால்வாயில் 1219.86 மீட்டர் தூரமும் தண்ணீருக்கடியில் சுரங்கப்பாதை அமைகிறது. அதன்படி பசுமை வழிச்சாலை முதல் அடையாறு ஆற்றின் கீழ் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதை மற்றும் அடையாறு பகுதியில் அமைய உள்ள அடையாறு மெட்ரோ ரயில் நிலையத்திற்காக, அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது பாலத்தின் திருவான்மியூர் செல்லும் பகுதி இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது. எனவே பசுமை வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக, அடையாறு சந்திப்பு அருகில் தற்காலிக இரும்பு பாலம் ஒன்றை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விழுப்புரத்தில் அப்பாவி இளைஞர் இப்ராஹிம் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
சென்னை கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சாலையை சுத்தம் செய்யும் போது திடீரென தீப்பற்றிய மாநகராட்சி வாகனம்..!!
நாமக்கல் - துறையூர் சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ. வேலுபதில்
அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திர கோளாறு காரணமாக பால் அனுப்ப கால தாமதம்: அதிகாரிகள் பணியிடைநீக்கம்
நெல்லையில் ஐபிஎஸ் அதிகாரி கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்..!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!