ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கு ஒன்றிய அரசில் புது பதவி: எடப்பாடி அணி அப்செட்
2022-10-14@ 00:17:00

சாயல்குடி: ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி தர்மர், ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எடப்பாடி அணியினர் அப்செட் ஆகியுள்ளனர். கடந்த மே மாதம் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலாளரும், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளருமான ஆர்.தர்மர் போட்டியிட்டனர். இவர்களில் தர்மர், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இதன் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்ற பிரச்னையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே பிளவு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி தர்மருக்கு, ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. தற்போது அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.பி தர்மருக்கு பதவி வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த ஒன்றிய தொழிலாளர், ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டு குழு கூட்டத்தில் உறுப்பினராக அதிமுக சார்பில் எம்.பி தர்மர் கலந்து கொண்டார். அதிமுக உறுப்பினர் என்ற முறையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் அணி மகிழ்ச்சியடைந்துள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய செயல் இபிஎஸ் அணியை அதிருப்தியடைய செய்துள்ளது.
Tags:
OPS backed MP new post in Union Govt Edappadi team upset ஓபிஎஸ் ஆதரவு எம்பி ஒன்றிய அரசில் புது பதவி எடப்பாடி அணி அப்செட்மேலும் செய்திகள்
சபாநாயகருடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை..!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது!!
பதவி பறிபோக காரணமான கோலாரில் ஏப்.5ல் ‘சத்தியமேவ ஜெயதே’ ராகுல் பிரசாரம் தொடக்கம்
ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி நாடாளுமன்றம் முடங்கியது: 2வது நாளாக கருப்பு உடையில் வந்தனர்
நாடாளுமன்ற துளிகள்...
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!