36வது தேசிய விளையாட்டு போட்டி 5வது இடம்பிடித்தது தமிழ்நாடு: 25 தங்கம் வென்று அசத்தல்
2022-10-13@ 00:34:40

அகமதாபாத்: தேசிய விளையாட்டு போட்டித் தொடரில் தமிழகம் 25 தங்கம் உள்பட மொத்தம் 74 பதக்கங்களை கைப்பற்றி 5வது இடம் பிடித்தது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், ராஜ்கோட் உள்பட 6 நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரில் மாநில, யூனியன் பிரதேச அணிகள் மற்றும் சர்வீசஸ் (ராணுவம்) என மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. செப்.27ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் 8 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
கடைசி நாளான நேற்று ஆண்கள் வாலிபால் பைனல் கடைசி ஆட்டமாக நடந்தது. அதில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின. கடும் சவாலாக இருந்த ஆட்டத்தில் தமிழ்நாடு கடுமையாகப் போராடிய நிலையில், கேரளா 25-23, 28-26, 27-25 என நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. தமிழ்நாடு வெள்ளிப் பதக்கத்துடன் விடைபெற்றது. முன்னதாக நடந்த 3வது இடத்துக்கான ஆட்டத்தில் அரியானா 3-2 என்ற செட் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி வெண்கலத்தை வசப்படுத்தியது.
பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் 5 இடத்தை பிடித்தது. நீச்சல் முதல் யோகாசனம் வரை 20 வகையான போட்டிகளில் பங்கேற்ற தமிழ்நாடு, அதிகபட்சமாக தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது. நீச்சல் பிரிவுகளில் ஒரு தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை பெற்றது. ரோலர் விளையாட்டுப் பிரிவிலும் 3 தங்கம் உள்பட 9 பதக்கங்களை தமிழ்நாடு வசப்படுத்தியது.
ராணுவம் முதலிடம்: இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலத்துடன் மொத்தம் 128 பதக்கங்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தது. மகராஷ்டிரா 39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலத்துடன் 140 பதக்கங்களை வென்று 2வது இடத்தையும், அரியானா 38 தங்கம் உள்பட 116 பதக்கங்களுடன் 3வது இடத்தையும், 27 தங்கம் உட்பட 88 பதக்கங்களுடன் கர்நாடகா 4வது இடத்தையும் பிடித்தன.
மேலும் செய்திகள்
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் வேறு நாட்டில் நடத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்: வாசிம் கான் தகவல்
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்
தோனி அடுத்த 3 சீசன்களில் விளையாடுவதற்கு போதுமான தகுதியுடன் இருக்கிறார்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி
அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி!
காலிறுதியில் ரைபாகினா: காயத்தால் விலகினார் பியான்கா
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி: தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!