SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேட்டூர் அணை முன்கூட்டியே திறந்ததால் சீர்காழி பகுதிகளில் சம்பா நடவு பணி தீவிரம்

2022-10-10@ 14:18:25

சீர்காழி : சீர்காழி பகுதியில் சம்பா நடவு பணிகள் விறுவிறுப்பான நடந்து வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், புத்தூர், மாதிரி வேலூர், வடரங்கம், மாதானம், பழைய பாளையம், வடகால், எடமணல், அரசூர், எருக்கூர், கொண்டல், பனங்காட்டான்குடி, எலத்தூர், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, தென்னலக்குடி, காத்திருப்பு, செம்பதனிருப்பு, புதுத்துறை, திருவெண்காடு, மங்கைமடம், திருவாலி, கீழச்சாலை, மருவத்தூர்,கீழத்தென்பாதி உள்ளிட்ட சீர்காழி தாலுகா அளவில் இந்த ஆண்டு விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கிடையே சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் தொடங்கியுள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்ததாலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும் நடவு பணிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தற்போது அதிக இடங்களில் உழவு செய்து, நாற்றுகளைப் பறித்து நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நடவு செய்த வயல்களில் களையெடுக்கும் பணி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணிபணிகளிலும், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன.

சில இடங்களில் பயிர்களுக்கு யூரியா தெளிக்கும் பணிகளும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா நடவு பணிகள் சுமார் 20,000 ஏக்கரில் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகளை விவசாயிகள் ஓரிரு வாரங்களில் முழுமையாக முடித்து விடுவார்கள் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • switzerland-japan-win

    சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!

  • choco-fac-fire-27

    அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!

  • missii

    வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!

  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்