கல்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ: மின்சாரம் இல்லாமல் தவிப்பு
2022-10-08@ 02:56:45

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால், கிராம மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். கல்பாக்கம் அடுத்த நெடுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று பிற்பகலில் தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கூவத்தூர் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் மின் விநியோகத்தை துண்டித்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மர் எரிந்து போனதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘டிரான்ஸ்பார் பல மாதங்களாக அடிக்கடி, லேசான வகையில் தீப்பிடித்து தீப்பொறிகள் கொட்டும். அப்போதெல்லாம், மின் வாரிய ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தால் அவர்கள் தாமதமாக வந்து மின் விநியோகத்தை நிறுத்தி மறுநாள் வந்து அதை சரி செய்து விட்டு மின் விநியோகம் வழங்குவார்கள். இது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், தற்போது டிரான்ஸ்பார்மர் முழுவதுமே எரிந்து விட்டது. மின்சாரம் இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, அடிக்கடி தீப்பிடிக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா, சீரான மின்சாரத்தை வழங்க வேண்டும் என கூறினர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!