தாம்பரம் அருகே காப்புக்காட்டில் மரநாய் பிடித்தவர் கைது
2022-10-08@ 02:48:52

தாம்பரம்: தாம்பரம் அருகே காப்புக்காட்டில் கூண்டு வைத்து, ஆசிய மரநாய் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் வனத்துறைக்குட்பட்ட மறைமலைநகர், கூடலூர் காப்புக்காடு பகுதியில் தாம்பரம் வனத்துறை ரேஞ்சர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் வழக்கம்போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கையில் சிறிய கூண்டோடு ஒரு நபர் தனியாக வந்துள்ளார். அவர், வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் தப்பிக்க முயற்சித்தபோது, அவரை மடக்கி பிடித்த வனத்துறையினர், அவர் வைத்திருந்த கூண்டை சோதனை செய்தனர். அப்போது, அதில் அரிய வகையான ஆசிய மரநாய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரபு (35) எனவும், காப்புக்காடு பகுதியில் முயல் பிடிப்பதற்காக கூண்டு வைத்ததாகவும் அதில் மரநாய் சிக்கியதாகவும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த வனத்துறையினர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட ஆசிய மரநாயை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க வனத்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது
மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை
தலைமை செயலக அதிகாரிகள் என கூறி அரசு வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி: சகோதரர்கள் உள்பட 6 பேர் கைது
கோவையில் ரூ10.82 லட்சம் மதிப்புள்ள 157 கிலோ கஞ்சா சாக்லேட் சிக்கியது: வட மாநில வியாபாரி கைது
ஐடி நிறுவனங்களில் வேலை தருவதாக கூறி நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம்பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்ற பாலியல் புரோக்கர் அதிரடி கைது: 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!