யுபிஎஸ்சி தகவல் அறிய மொபைல் ஆப் அறிமுகம்
2022-10-08@ 02:03:25

புதுடெல்லி: ஒன்றிய தேர்வாணையத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு அறிவிப்புகள், முடிவுகளை இனி மொபைல் ஆப்-ல் பார்க்கலாம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வினை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. www.upsc.gov.in என்ற இணைய பக்கத்தில்இந்த தேர்வுகள் தொடர்பான தகவல்களை அது வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், மாறும் கால சூழலுக்கு ஏற்ப, தேர்வுத் தயாரிப்பு மற்றும் ஆள்சேர்க்கும் முறைகளை வசதிகளை மேலும் எளிமையாக்கும் விதத்தில், ‘யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ செயலி’ (upscofficial app) என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தேர்வாணையத்தின் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் ஆப்-ல் கிடைக்கும் இந்த செயலி முற்றிலும் இலவசமானது. ஆனால், இந்த செயலி மூலம் நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.
மேலும் செய்திகள்
ரூ38 கோடி மோசடி வழக்கில் தெலுங்கு நடிகர் கைது: ஐதராபாத் போலீஸ் அதிரடி
ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடி கியாரா, சித்தார்த் திடீர் திருமணம்
'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் ஸ்ரீகாளஹஸ்தியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்-4 மணிநேரம் தரிசனம் ரத்து
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!