விவசாயிகள் சொந்த நிலங்களில் மரக்கன்று நட விரும்பினால் இலவசமாக வழங்கப்படும்; வனத்துறை அறிவிப்பு
2022-10-08@ 11:36:27

சென்னை: விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மரக்கன்றுகளை நட விருப்பம் தெரிவித்தால் இலவசமாக வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நலச்சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதில் பெறும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.
விவசாயிகள் மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை இணைய தளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குனர், பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8வது தளம், சைதாப்பேட்டை, சென்னை -600 015 என்கிற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
விவசாயிகள் சொந்த நிலங்களில் மரக்கன்று நட விரும்பினால் இலவசமாக வழங்கப்படும்; வனத்துறை அறிவிப்புமேலும் செய்திகள்
காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆவின் பணி நியமனம் ரத்து எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ஊட்டி மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவக்கம்
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
எஸ்.ஐ தேர்வுக்காக தீவிர ஓட்டப்பயிற்சி வாலிபர் திடீர் சாவு
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!