பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது
2022-10-07@ 03:15:48

சென்னை: ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள சென்னையில் நாளை குறைதீர் முகாம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையிலும், குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 8ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
‘சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது: காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்
சென்னை செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்களின் அனைத்து குடும்ப சுப நிகழ்ச்சிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: சென்னை மாநகராட்சி
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 4-ல் மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை - பெங்களூரு விரைவுச்சாலைக்கு நிலம் எடுப்பில் ரூ.100 கோடி மோசடி..? அதிர்ச்சி தகவல்..!
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!