பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து விரிவுரையாளர்களை நீக்கக்கூடாது: ஓபிஎஸ் கோரிக்கை
2022-10-07@ 00:50:30

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து நாளை (இன்று) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை விட்டு நீக்குவது என்பது இயற்கை நியதிக்கு முரணானது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களையும், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரிகளையும் அழைத்து பேசி, அவர்களுக்கு எங்கு பணி கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து, அனைவரையும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:
POLYTECHNIC COLLEGE LECTURER NOT DELETED OBS CLAIM பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் நீக்கக்கூடாது ஓபிஎஸ் கோரிக்கைமேலும் செய்திகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
இபிஎஸ் போல் பாஜவை தவிர்த்த ஓபிஎஸ்‘தேசிய ஜனநாய கூட்டணி’ என பேனர்: மானத்தை வாங்குறாங்களே என்று குமுறும் நிர்வாகிகள், தொண்டர்கள்
ஓபிஎஸ் அணி, அமமுக வேட்பாளர் உட்பட 16 பேர் வேட்பு மனு தாக்கல்
பால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!