கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததால் கர்ப்பிணியான நடிகை திவ்யா மருத்துவமனையில் அனுமதி: கரு கலையும் அபாயம் என மருத்துவர்கள் எச்சரிக்கை; போலீசார் தீவிர விசாரணை
2022-10-07@ 00:50:27

சென்னை: கர்ப்பிணி மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை, அவரது கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததால் கரு கலையும் அபாயம் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகர் நைனா முகமது. இவர் தன் பெயரை அர்னவ் என்று மாற்றிக் கொண்டு பல்வேறு முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடன் நடித்து வந்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முன்னதாக, திவ்யா, இஸ்லாமிய மதத்திற்கு மாறி அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களின் திருமணம் இந்து, இஸ்லாமிய முறைப்படி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகு, இருவரும் ஐந்து மாதங்களாக திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இதில் திவ்யா மூன்று மாத கர்ப்பமானார். இந்நிலையில், தனது கணவர் அர்னவ்விற்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு உள்ளதாக திவ்யாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து கணவன், மனைவி இடையே கடந்த இரு தினங்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மூன்று மாத கர்ப்பிணியான தன்னை அர்னவ் பிடித்து கீழே தள்ளி விட்டதாகவும், கீழே விழுந்த தனக்கு கரு கலையும் ஆபத்து இருப்பதாக கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திவ்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் திருவேற்காடு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். முறையான புகாருக்கு பிறகு விசாரணை தொடங்குவோம் என்று திருவேற்காடு போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில், தன்னுடைய கணவர் தன்னை அடித்ததால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கரு கலையலாம் என்று திவ்யா வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், அர்னவ் தன்னை கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் அடித்து உதைத்தார். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ணக் கூடாது என்பதற்காக நான் எல்லாவற்றையும் பார்த்து செய்து வந்தேன்.
ஆனால், என் கணவர் என்னை அடிச்சதால் நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கிறது. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தபோது அவர் அங்கே இல்லை. என்னால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. வயிறு வலி மற்றும் ரத்தகசிவு காரணமாக நான் பயந்துவிட்டேன் என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே அர்னவ் தனது வழக்கறிஞருடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று மதியம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் அர்னவ் நிருபர்களிடம் கூறியபோது, மனைவி திவ்யாவிற்கும் எனக்கும் திருமணம் நடைபெற்ற அன்று தான், அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்ததும், விவாகரத்து ஆகியுள்ளது தெரியவந்தது.
இதனை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்தேன், எனினும் அவள் மீது இருந்த காதல் காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததேன். என் மனைவியை நான் தாக்கியதாக கூறும் நேரத்தில், நான் அவருடன் இல்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இதனை காவல்துறை கேட்கும்போது காண்பிக்க தயாராக இருக்கிறேன். நான் அடித்து தான் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டதா அல்லது எனது குழந்தையை அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து கருவை கலைக்க முயற்சி செய்வதாக சந்ததேகம் உள்ளது. ஈஸ்வர் என்பவர் தனக்கு நன்மை செய்வதாக கூறி இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார். மேலும், தன்னை அடிக்கடி மிரட்டி வருகிறார். நான் விவாகரத்து செய்துவிடுவேன் என எங்கும் கூறவில்லை, மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழ்வே விரும்புகிறேன். கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும் என கூறினார். என் கணவர் என்னை அடித்ததால் நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டு இருக்கிறது. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்து விட்டேன்.
Tags:
Husband pregnant actress Divya hospital doctors alert; Police investigation கணவர் கர்ப்பிணி நடிகை திவ்யா மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரிக்கை; போலீசார் விசாரணைமேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!