காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்க கூடும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
2022-10-06@ 18:04:22

ஜெனீவா: காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
ஹரியானவை சேர்ந்த Maiden மருந்தியல் நிறுவனம் தயாரித்த promethazine oral solution, kofexmalin, MaKOFF, MaGrip n Cold ஆகிய மருந்துகள் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தரத்தின் படி இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த 4 இருமல் மருந்துகளில் Diethylene Glycol மற்றும் ethylene Glycol ஆகிய ரசாயனங்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் இந்த மருந்துகள் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்த மருந்துகள் காரணமாக இருக்க கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தரமற்ற இருமல் மருந்துகள் தற்போது காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், வேறுநாடுகளில் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்துவருவதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், இந்த மருந்துகளை பயன்படுதத்துவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி, சிறுநீர் கழிக்க முடியாத நிலை, தலைவலி, மனநிலை பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை நேரிடுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் உடனடி விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
மேகாலயாவில் 5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்முதல்வர் கான்ராட் வாக்குறுதி
விக்கிபீடியாவை முடக்கியது பாகிஸ்தான்
75வது சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கை தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: அதிபர் ரணில் வலியுறுத்தல்
இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை இந்தியாவுக்கு அனுப்ப தயார்: சம்பிரதாயப்படி அமெரிக்காவில் தேங்காய் உடைத்து வழியனுப்பல்
சூரிய குடும்பத்தில் வியாழனில் தான் அதிக நிலாக்கள்: புதிதாக 12 கண்டுபிடித்ததால் 92ஆக உயர்வு
உளவு பார்க்க சீனா அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பலூனைப் பார்த்து பதறும் அமெரிக்கா: சுட்டு வீழ்த்தினால் வெடித்து சிதறுமோ என அச்சம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!