முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: கந்தகோட்டம், முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் வசந்த மண்டபத்தில் அன்னதானம்
2022-10-06@ 17:15:37

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 'ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின்கீழ்', சென்னை, கந்தகோட்டம், முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் வசந்த மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.
வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நேற்றைய தினம் “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினையும் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுறுத்தலின்படி, சென்னை, கந்தக்கோட்டம், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் வசந்த மண்டபத்தில் 06.10.2022 முதல் 08.10.2022 வரை அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
இன்று (06.10.2022) திருக்கோயில் வசந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட வள்ளலாரின் திருவுருவச்சிலைக்கு முன் ஜோதி ஏற்றப்பட்டு, சமய சுத்த சன்மார்க்க அன்பர்களால் திருவருட்பா பாராயணம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் “ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின்கீழ்“ அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.
இந்த அன்னதான நிகழ்விற்க்கான ஏற்பாடுகளை சென்னை மண்டல 1 இணை ஆணையர் முனைவர் ந. தனபால், உதவி ஆணையர் திரு.எம்.பாஸ்கரன், செயல் அலுவலர்கள் திரு.கொளஞ்சி, திருமதி நற்சோணை, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு.ராமராஜ், திரு.நாராயணன், மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Tags:
முதல்வர் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் அன்னதானம்மேலும் செய்திகள்
உள்வாடகைக்கு விட்டதால் ரூ.20 கோடி மதிப்பு கோயில் கடைக்கு சீல்
கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரவுடிகள் செல்போனை பறித்ததால் 4 கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமி: பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு
தனியார் பேருந்து மோதி இந்திரா காந்தி சிலை உடைந்ததால் பரபரப்பு
சொத்துவரி கட்டாத 6 கடைகளுக்கு சீல்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!