விஜய தசமி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அம்பு போடும் நிகழ்ச்சி கோலாகலம்
2022-10-06@ 15:09:03

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்க நாச்சியார் நவராத்திரி விழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை 9 நாட்கள் நடந்தது. இந்நிலையில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு சிங்க பெருமாள் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு ஆஸ்தானமிருந்தபடி மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி சிங்கப்பெருமாள் கோயிலில் விஜயதசமி மண்டபத்துக்கு எதிரே உள்ள நாலுகால் மண்டபத்தில் இருந்தவாறு வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சியை கண்டருளினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாத்தார வீதி வழியாக வலம் வந்து கோயில் வளாகத்தில் உள்ள சந்தனு மண்டபத்துக்கு இரவு 8.30 மணிக்கு வந்தார். அதன்பின்னர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுது பாறையில் இரவு 9.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளினார்.
மேலும் செய்திகள்
கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!.. விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுக்க மும்முரம்
தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது
நெல்லை, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்: பணியில் ஈடுபட்டுள்ள 200-க்கு மேற்பட்டுள்ள தன்னார்வலர்கள்
பள்ளி பேருந்து ஏரியில் கவிழ்ந்து 22 மாணவர்கள் படுகாயம்
சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்து நாயை துரத்திய சிறுத்தை: மயிரிழையில் உயிர் தப்பிய நாய்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!