SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டுக்கு 25 லட்சம் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்: 1500 பேர் வரை அமரும் வகையில் இருக்கை வசதி

2022-10-06@ 14:57:29

திருச்சி: சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை ஸ்தலமாக பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. தமிழகத்தில் எத்தனை பெரிய கோவில்களை நாம் பார்த்திருந்தாலும், இந்த கோயிலில் மொத்தம் 7 பிரகாரங்கள் அமைந்துள்ளது. அதேபோல் 7 மதில்கள், ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார் என மொத்தம் 7 தாயார்கள் உள்ளனர். மேலும் ரங்க விமானம், அசையும் கொடிமரம், ஸ்ரீராமானுஜரின் திருமேனி, தேயும் அரங்கனின் செருப்புகள், அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள், வளரும் நெற்குதிர்கள், ஐந்து குழி மூன்று வாசல் என கண்டுகளிக்கும் ேசவை அமைந்துள்ளது.

இந்த கோயில் 7 உற்சவம், 7 திருவடி சேவை என அனைத்தும் 7 என்ற சிறப்பான எண்ணில் அமைந்துள்ளது. இத்தகைய பிரசித்திபெற்ற கோயிலுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம். எனவே பக்தர்களின் வசதிக்காக கோயிலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து வரப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து கூறுகையில், கடந்த 6 மாத காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரங்கநாதரை தரிசிக்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது காத்திருக்க வேண்டியதால், எனது முயற்சியால் ரங்கநாதரை தரிச்சிக்க செல்லும் மூலஸ்தானத்தில் இருந்து குறிப்பிட்ட இடம் வரை சுமார் 300 ஸ்டெய்ன்லஸ் ஸடீல் இருக்கைகள் நிரந்தரமாக இருக்கும்படி உபயதாரர்கள் மூலம் பொறுத்தப்பட்டுள்ளது.இந்த இருக்கையில் சுமார் 1500 பேர் வரை ஒரே நேரத்தில் அமர முடியும். பல மணி நேரம் பேர் காத்திருந்து ரங்கநாதரை சேவிக்க வருபவர்களில் பலர் முதியவர்கள், உடல்நல குறைபாடு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், என பலரும் வருகிறார்கள். எனவே அவர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அமர்ந்து உள்ள இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு வௌியிலின் தாக்கம் காரணமாக உஷ்ணம் தெரியாமல் இருக்க சுமார் 1 குதிரை திறன் உடைய மின் மோட்டாரில் இயங்கும் மின்விசிறிகள், இந்த இருக்கைகள் உள்ள பகுதியில் சுவர்களில் பொறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மின்விசிறியும் சுமார் தலா 11 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலவிடப்பட்டு கடந்த மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சமயம் சார்ந்த நூல்களும், மொழி சார்ந்த நூல்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பலரும் இந்த நூலகத்தை பயன்படுத்திட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதேபோல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட பிரசாதம் வழங்கும் திட்டமும் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையில் தமிழகத்தில் 10 பெரிய கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டம் சமயபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களில் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயில்களுக்கு வரும் பக்தர்களில் பலர் வயது முதிர்ந்தவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட மணி நேரத்தில் உணவருந்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு இந்த பிரசாதம் தற்காலிகமான தீர்வை அளிக்கும் என்பதால் பிரசாதம் வழங்க தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கி இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த பிரசாத திட்டத்தின் மூலம் ஸ்ரீரங்கத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 4ஆயிரம் லட்டுகள் அல்லது மைசூர் பாக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லட்டும், மைசூர் பாக்கும் சுமார் 40 கிராம் வரை இருக்கும் அளவிற்கு வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த வைகுண்ட ஏகாதசி விழாவின் போது பக்தர்களுக்கு என்று அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டது. இப்படி மொத்தம் ஒரு வருடத்தில் சுமார் 25 லட்சம் லட்டு மற்றும் மைசூர் பாக்குகள் கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு வருகிறது. எனவே பக்தர்களின் நலனில் தொடர்ந்து அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிரசாத திட்டத்தின் மூலம் ஸ்ரீரங்கத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 4ஆயிரம் லட்டுகள் அல்லது மைசூர் பாக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு லட்டும், மைசூர் பாக்கும் சுமார் 40 கிராம் வரை இருக்கும் அளவிற்கு வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்