சிங்கப்பூரிலிருந்து கடத்தி வந்த ரூ.2.94 கோடி நகைகள் பறிமுதல்: கோவை விமானநிலையத்தில் 2 பேர் கைது
2022-10-06@ 00:45:04

பீளமேடு: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.2.94 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சில பயணிகள் தங்க நகைகள் கடத்தி வருவதாக கோவை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் கோவையில் தரையிறங்கியதும் அதில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். இதில் 5 பயணிகள் தங்கள் உடமைகளில் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களில் 2 பயணிகள் தங்க சங்கிலி மற்றும் வளையல்களை சூட்கேஸ், பேண்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து 5.6 கிலோ எடை உள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.2.94 கோடி. பிடிபட்ட முகம்மது அப்சல் (32) என்ற பயணியிடம் ரூ.1 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் இருந்ததால் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாத சட்டப்பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (66) என்ற பயணி ரூ. 50 லட்சத்துக்கும் குறைவான தங்க நகைகளை கடத்தி வந்ததால் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் 3 பேர் கொண்டு வந்த நகைகள் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக இருந்ததால் அவர்கள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:
Singapore kidnapper confiscation of jewels Coimbatore airport 2 people arrested சிங்கப்பூர் கடத்தி நகைகள் பறிமுதல் கோவை விமானநிலைய 2 பேர் கைதுமேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரி எனக்கூறி கொண்டு 6 பெண்களை திருமணம் செய்த ‘கில்லாடி’ கைது: 7வது முயற்சியின் போது போலீசில் சிக்கினார்
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் சிறையிலடைப்பு
வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது
கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை
அவிநாசி அருகே ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கிய கல்யாண ராணி கைது: 3வது கணவரை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றபோது சிக்கினார்
வேறு நபருடன் நிச்சயம் செய்ததால் ஆத்திரம் ஓடும் ஆட்டோவில் காதலியின் கழுத்தை அறுத்த காதலன் கைது: காதலுக்காக கப்பல் வேலையை துறந்தவர் கம்பி எண்ணுகிறார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!