பணி நீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் செங்குறிச்சி, திருமாந்துறை சுங்க சாவடிகளுக்கு அக். 10 வரை பாதுகாப்பு: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
2022-10-06@ 00:44:29

சென்னை: பணிநீக்கத்துக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம் காரணமாக வசூல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை அக்டோபர் 10 வரை தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டாக் தொழில்நுட்ப முறை ஆகியவற்றை சேதப்படுத்தியதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பரப்பளவில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக்கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி சரவணன் காணொலி காட்சி வாயிலாக விசாரித்தார். மனுதாரர் தரப்பில், போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம் எனவும் வாகன போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதுகாப்பு அளிப்பதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:
Dismissal employees strike Sengurichchi Thirumanturai Customs booth Oct. Up to 10 Security Police Court பணி நீக்க ஊழியர்கள் போராட்டம் செங்குறிச்சி திருமாந்துறை சுங்க சாவடி அக். 10 வரை பாதுகாப்பு போலீசு ஐகோர்ட்மேலும் செய்திகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!