ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைப்பதையே எடப்பாடி வாடிக்கையாக கொண்டுள்ளார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி
2022-10-06@ 00:44:15

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை அரங்கேற்றியுள்ளார். முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எப்பொழுதுமே ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைப்பதிலேயே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விதைகளை பொறுத்தவரை நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி விதைகள் 53,182 மெட்ரிக் டன் இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளதாலும், சீரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாலும் விவசாயிகள் உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏதுமில்லை. சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேளையில் கூட்டுறவு வேளாண் கடன்கள் வழங்கப்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டில் மட்டுமே 6,04,060 விவசாயிகளுக்கு ரூ.4,566.13 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ.603.50 கோடி அளவிற்கு 87,768 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியில் 4,87,640 விவசாயிகளுக்கு ரூ.3814.19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 63,398 விவசாயிகளுக்கு ரூ.427.05 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 98,968 புதிய விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இவர்களில் 77,005 விவசாயிகளுக்கு ரூ.523.67 கோடி விவசாய கடன்கள் பெற்றுள்ளனர். இந்த உண்மை நிலவரம் கூட தெரியாமல் யாரோ எழுதிகொடுத்ததை படித்துப்பார்க்காமல் அவசர கதியில் அறிக்கையாக வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் போலி விவசாயி எடப்பாடி.
* பொய்யாக தம்பட்டம் அடிப்பதா?
உண்மைக்குப் புறம்பான வகையில் அதிமுக ஆட்சியில் 2011ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 4.50 லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக பொய்யாக தம்பட்டம் அடிக்கும் எடப்பாடி அறிக்கைக்கு, உண்மை நிலவரம் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வருடம் குறுவை
பயிரிட்ட
பரப்பளவு
(ஏக்கரில்)
2011 3.428
2012 1.603
2013 2.050
2014 2.560
2015 3.053
2016 3.160
2017 2.760
2018 3.191
2019 2.908
2020 4.122
2021 4.900
2022 5.365
Tags:
Accusation without evidence Edappadi Vadikai Minister MRK Panneerselvam ஆதாரமின்றி குற்றச்சாட்டு எடப்பாடி வாடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மேலும் செய்திகள்
அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்க நடவடிக்கை: ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திண்ணை பிரசாரம்
அதிமுக அமைப்பு செயலாளராக செந்தில் முருகன் நியமனம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 100 பேர் மீது வழக்கு
அதிமுகவுக்கு ஏற்பட்ட பிணி ஜெயக்குமார்: கு.ப.கிருஷ்ணன் ஒரே போடு
அண்ணாமலைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: மனு தாக்கலுக்கு பின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!